இன்றைய தினம் ஆடிப்பூரம்

25f979cc6fef801cfd394ffd920f6c39

ஆடி மாதம் என்றாலே விசேஷங்களுக்கு குறைவில்லை தெய்வீக மாதமாக இந்த மாதம் போற்றப்படுகிறது. அம்பாளுக்குரிய அனைத்து விசேஷங்களும் இந்த மாதத்தில் வரும் முக்கிய நாட்களில் நடைபெறுகின்றன. இதில் ஆடிப்பூரம் முக்கியமான விசேஷ தினம் ஆகும். ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திர தினத்தை ஆடிப்பூர தினமாக கொண்டாடுகிறோம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தன்று விசேஷ வைபவங்கள் நடக்கிறது. இந்த பூரம் நாளில்தான் ஆண்டாள் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த ஆடி மாதம் வரும் பூரம் விசேஷமானதாகும்.

உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. 

சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என புராணங்கள் கூறுகின்றன.

வெள்ளிக்கிழமைகளில் ஆடிப்பூரம் வந்தால் மிகவும் விசேஷம் என்றும் கூறப்படுகிறது. ஆடிப்பூரநாளில் அம்பாள் பூமிக்கு வந்து மக்களை பார்த்து அருள் புரிவாள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews