Connect with us

இன்று அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம்!!

News

இன்று அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம்!!

இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்பட்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில்லாங் பகுதியில் உயிரிழந்தார். அவருடைய நினைவு தினம் இன்று என்பதால் நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்

இந்தியாவின் இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் கலாம். இதற்கு காரணம் அவர் இளைஞர்கள்மீது வைத்திருந்த நம்பிக்கைதான். அவர் இளைஞர்களிடம் கனவு காணுங்கள் எனக் கூறி பின்னர் அந்தக் கனவை நிஜமாக்க பாடுபடுங்கள் என்று அறிவுறுத்தினார். அவரின் இந்த வாக்கியம் இளைஞர்கள் பலருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. 

370fbfbdb769edd377622689690e321e-2

2002ம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவி வகித்தார். இவரின் பதவி காலத்தில் அனைவராலும் மிகவும் போற்றப்பட்ட குடியரசுத் தலைவராக இருந்தார். 

ஏனென்றால் அவர் குடியரசுத் தலைவராக இருந்தப் போதும் மாணவர்களை சந்திப்பது, அவர்களுடன் உரையாடுவது போன்ற செயல்களை செய்ய தவறியதிவில்லை. அதேபோல அவர் குடியரசுத் தலைவராக இருந்த போது நகர்புற வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு வருவது குறித்து அப்போதைய மத்திய அரசுடன் தீவிரமாக ஆலோசித்து வந்தார். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top