இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இன்றைய தினத்தில் அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவாக அப்பகுதி மக்கள்கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment