நள்ளிரவு பிடித்த கனமழை! இன்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

அக்டோபர் மாத இறுதியிலிருந்து இந்தியாவில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியது. இதன் விளைவாக தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வந்தன. குறிப்பாக கடலோர தமிழக மாவட்டங்கள், வட தென் தமிழக மாவட்டங்கள் என அனைத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது.

மழை

வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவானது. தற்போது வரை வங்கக்கடலில் நான்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகி உள்ளன. இந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

ஏற்கனவே நம் தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த கனமழை காரணமாக தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவித்துள்ளார்

தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதனை போல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் பாபு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment