இன்று நான்கு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!: முதலமைச்சர்  ஸ்டாலின்

நேற்றைய தினம் எதிர்பாராதவிதமாக தமிழகத்தில் கனமழை பெய்தது. அதுவும் குறிப்பாக சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்தது.

குறிப்பாக  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் அங்கு மழை நீர் சாலைகளில் தேங்கியது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று காலை தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் மழை தேங்கிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் இன்று விடுமுறை என்று அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment