Connect with us

இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை; எதற்காக தெரியுமா ?

xholiday 1607340851 jpg pagespeed ic 16epw bsfr 1635935884

Tamil Nadu

இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை; எதற்காக தெரியுமா ?

தமிழகத்தில் இன்று கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறியில், எம்டென், எம்ஆர்க், எம்சிஏ, கலை அறிவியல் போன்ற கல்லூரிகளில் நாளை ’டான்செட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகளை எழுத சுமார் 36,710 பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக எம்சிஏ படிப்பில் சேர சுமார் 8,391 பேரும், எம்பிஏ படிப்பில் சேர 21,557 பேரும் மற்ற படிப்புகளில் சேர 6,762 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதனிடையே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே 2-ம் தேதி நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அதே போல மே 13- ம் தேதி வரையில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இதனால் நாளை ’டான்செட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடைபெற இருப்பதால் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top