உத்தரவை மாற்றிய மாவட்ட ஆட்சியர்; தூத்துக்குடியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!

நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறைகளை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்து வருகின்றனர்.

மழை

அதோடு மட்டுமில்லாமல் வங்கக்கடலில் அடுத்தடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கொண்டு வருகிறது. இன்றைய தினமும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

கடந்த 15 நாட்களில் இதோடு நான்காவது காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

rain and school

இதனால் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. குறிப்பாக நேற்றைய தினம் தூத்துக்குடி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு உத்தரவிட்டார் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

இவ்வாறு இருக்கையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment