Connect with us

சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை.!! யாராவது ஒருவர் ஜெயிச்சு தான் ஆக வேண்டும்..!!

csk vs mi

News

சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை.!! யாராவது ஒருவர் ஜெயிச்சு தான் ஆக வேண்டும்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை.!! யாராவது ஒருவர் ஜெயிச்சு தான் ஆக வேண்டும்..!!

ஐபிஎல் போட்டி என்றாலே அனைவரும் முதலில் சொல்வது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் தான். ஏனென்றால் இந்த இரண்டு அணியின் ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் போல விறுவிறுப்பாக காணப்படும்.

இந்த இரண்டு அணிகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. அதே வேளையில் ஐபிஎல் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் கோப்பையை பெற்ற அணியாக வலம் வருகின்றன. ஆனால் 15வது ஐபிஎல் சீசன் சென்னை மற்றும் மும்பை அணிக்கு சாதகமாக அமையவில்லை.

ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் படுதோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய ஆட்டங்களிலும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் இன்று மோதுகிறதாக தெரிகிறது. அதன்படி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை  மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு நடக்கும் போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிரம் காட்டிக் கொண்டு வருகின்றனர். இதனால் மீம்ஸ் கிரியேட்டர்கள், நெட்டிசன்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக ஜெயித்து தான் ஆக வேண்டும் என்று இணைய தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top