கவனமா இருங்க மக்களே! இன்று 9 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகுது கனமழை!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் மாத இறுதியில் முதல் இந்தியாவின் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதன் காரணமாக தமிழகத்தில் அதிக கனமழை கிடைத்துள்ளது.

கனமழை

இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம் ,விழுப்புரம், மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதோடு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு இடங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் டிசம்பர் 15ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment