மீண்டும் 6 மாவட்டங்களில் மிக கனமழை அறிவிப்பு: எண்டே கிடையாதா?

இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 6 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும்,
திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், பனப்பாக்கத்தில் தலா 20 செ.மீ., காஞ்சிபுரம் – 19 செ.மீ., திருவண்ணாமலை – 18 செ.மீ., ஆவடி – 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2,177 கன அடியில் இருந்து 2351 கன அடியாக அதிகரித்துள்ளதாகவும், ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.