இன்று 10 மாவட்டங்களில் கனமழை! நாளை 3 மாவட்டங்களில் மிக பலத்த மழை!

தமிழகத்தில் சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மழை நீர் சாலைகளில் புரண்டு ஓடியது.பெரும்பாலான வட தமிழக மாவட்டங்கள் அனைத்தும் மழை நீருக்குள் மூழ்கியது.

வானிலை மையம்

இந்த அதிதீவிர வடகிழக்கு பருவமழை தற்போது வரை பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பெரம்பலூர், கடலூர், திருச்சி,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

நாளைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment