#Breaking மக்களே உஷார்: 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனம்ழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment