இன்று குருப்பெயர்ச்சி ஆலயம் சென்று வழிபடுவீர்

இன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது. தற்போது மகர ராசியில் உள்ள குரு பகவான் அடுத்த இடமான கும்பராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த நிகழ்வு இன்று மாலை 6.10 மணிக்கு நடக்க இருக்கிறது.

குருப்பெயர்ச்சியால் ஏற்படும் சாதகங்கள் அதிகமாக்கிக்கொள்ளவும், பாதகங்கள் விலகவும் கோவிலுக்கு சென்று குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.

குருமார்கள் என சொல்லப்படும் மகான்களை வணங்கவும். இந்திய அளவிலும் தமிழக அளவிலும் குருவுக்கென சில பரிகார ஸ்தலங்கள் உள்ளன.

அவற்றில் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ஸ்வாமி மலை முருகன் கோவில், திங்கட்கிழமை மட்டும் வழிபாடு நடக்க்கும் பரக்கலகோட்டை பொது ஆவுடையார் கோவில், இன்னும் இந்திய அளவில் மந்த்ராலயம், ஷீரடி என எண்ணற்ற குரு பரிகார ஸ்தலங்கள் உள்ளன அங்கு சென்று குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் நன்மைகள் தேடி வரவும் குருவுக்கு அர்ச்சனை செய்துகொள்ளவும்.  சிவன் கோவில்களில் இருக்கும் தெட்சிணாமூர்த்தியும் குரு அம்சமானவர் அவரையும் வழிபடலாம். சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது அங்கும் சென்று வழிபடலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.