மீண்டும் ரூ.45,000க்கும் அதிகமான ஒரு சவரன் தங்கம் விலை.. ரூ.50,000 எப்போது?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்பதும் அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ரூ.45,000 மேல் ஒரு சவரன் தங்கம் விற்பனையான நிலையில் பின்னர் திடீரென குறைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.45,000க்கு மேல் தங்கம் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

gold rate 00

இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் 5630 என்றும் ஒரு சவரன் 45,040 என்றும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6090 என்றும் 8 கிராம் 48,720 என்றும் விற்பனை ஆகி வருகிறது. வெள்ளியை பொருத்தவரை இன்று ஒரு கிலோவிற்கு 700 ரூபாய் அதிகரித்து ரூ.80 ஆயிரத்து 700 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் இன்று 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை கூடிய விரைவில் 50,000 என்ற தொகையை எட்டும் என்றும் கூறப்படுகிறது. தங்கத்தின் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் திருமணம் சீசன்கள் வர இருப்பதால் தங்கத்தின் தேவை அதிகம் இருப்பதாலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதும் தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்து இருப்பதும் தங்கம் விலை உயர்ந்த காரணங்களாக கூறப்படுகிறது.

பங்குச்சந்தை மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மற்றும் லாபகரமானது என பொதுமக்கள் மனதில் எண்ணம் ஏற்பட்டுள்ளதால் தங்கத்தை சேமிக்கும் பழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது என்பதும் இதுவும் தங்கம் விலை உயர்வதற்கு ஒரு காரணமாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.