அட்சய திருதியை நெருங்கும் நிலையில் தங்கம் விலை திடீர் உயர்வு.. பொதுமக்கள் அதிருப்தி..!

வரும் ஞாயிறு அன்று அட்சய திருதியை என்பதால் அந்த தினத்தில் ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்று பலரது விருப்பமாக இருக்கும் நிலையில் தங்கம் விலை இன்று திடீரென மீண்டும் ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி அரை தங்கம் விலை ஒரே விலையில் இருந்தது. இதனை அடுத்து ஏப்ரல் 20ஆம் தேதி ஒரு கிராமுக்கு 15 ரூபாய் தங்கம் விலை அதிகரித்தது, 21ஆம் தேதி 15 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் இன்று 21ஆம் தேதி மீண்டும் 15 ரூபாய் அதிகரித்துள்ளது.

Gold bangles

இன்று ஒரு கிராம் ஆபர தங்கத்தின் விலை 5665 என்றும் 24 கேரட் தங்கத்தின் விலை 6112 என்று விற்பனை ஆகி வருகிறது. வரும் ஞாயிறு அன்று அட்சய திருதியை வருவதால் அன்றைய தினத்தில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் என்பதால் தங்க நகை கடைக்காரர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அன்றைய தினம் ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என ஏழை எளிய மக்களும், லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தங்கம் வாங்க வேண்டும் என பணக்காரர்களும் திட்டமிட்டுள்ள நிலையில் தங்கம் விலை திடீரென உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தங்கம் விலை மீண்டும் ரூ.5650 என குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால்தான் இந்தியாவிலும் தங்க வில்லை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்றும் தங்கம் விலை இனிமேல் பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்றும் நகைக்கடைக்காரர்கள் கூறி வருகின்றனர்.

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

பங்குச்சந்தை தொடர்ந்து சரிவில் இருந்து வருவதால் தான் அதிலிருந்து முதலீடுகளை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர் என்றும் இது இந்தியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் நடப்பதால் உலக அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை எதிர்காலத்தில் ஒரு கிராம் பத்தாயிரம் என விற்பனையாகும் என்றும் இன்னும் ஓரிரு வருடங்களிலேயே அந்த விலையை எட்டும் என்றும் தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.