குறைந்து கொண்டே வரும் தங்கம் விலை.. வாங்குவதற்கு சரியான நேரமா?

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இறங்கி வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5000 என விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 5600 க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 5630 என்று விற்பனையான நிலையில் இன்று 15 ரூபாய் குறைந்து 5615 என்றும் ஒரு சவரன் 44 ஆயிரத்து 920 என்றும் விற்பனையாகி வருகிறது. மீண்டும் 45 ஆயிரத்துக்கும் குறைவாக தங்கம் விலை விற்பனை ஆகி வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இந்த மகிழ்ச்சி நிரந்தரம் இல்லை என்றும் விரைவில் தங்கம் விலை மீண்டும் உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்க சந்தையில் குறைந்து வருகிறது என்பதும் ஆனால் இந்தியாவை பொருத்தவரை தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதாலும் வரி விகிதம் அதிகமாக இருப்பதாகவும் குறையவில்லை என கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் மீண்டும் தங்கத்தின் விலை உயர வாய்ப்பிருப்பதாகவும் அவ்வாறு உயர்ந்தால் இந்தியாவில் மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு கிராம் தங்கம் 6000 என்றும் ஒரு சவரன் தங்கம் 48 ஆயிரம் என்றும் விற்பனையாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தங்கத்தின் விலை குறையும் போது அதை வாங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சேமிக்கும் எண்ணம் கொண்டவர்கள் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே தங்கம் விலை இன்று குறைந்து இருப்பதை பயன்படுத்தி அவர்கள் தாராளமாக தங்கத்தை வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் உயர்ந்து வருவதால் தங்கத்தின் முதலீடு செய்வது பாதுகாப்பானது மற்றும் நல்ல லாபத்தை கொடுக்கக் கூடியது என்று தான் முதலீட்டு ஆலோசனைகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் மற்ற முதலீடுகளைப் போல் இல்லாமல் எந்த நேரமும் தங்கத்தை விற்பனை அல்லது அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதனால் அவசர செலவுக்கு தங்கம் மிகுந்த அளவில் கை கொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.