10 நாளில் ரூ.320 குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையும் என தகவல்..!

கடந்த பத்து நாட்களில் தங்கம் விலை 320 ரூபாய் குறைந்த நிலையில் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக நகை கடைக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மே மாதம் 13-ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.5715 என்றும் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.45,720 என்றும் விற்பனையாகி வந்தது. ஆனால் இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 5675 என்றும் ஒரு சவரன் 45,400 என்று விற்பனையாகி வருகிறது.எனவே கடந்த பத்து நாட்களில் ஒரு சவரனுக்கு 320 தங்கம் விலை குறைந்துள்ளது என்றும் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்து வருவதை அடுத்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தங்கத்தின் விலை சரிந்து வருகிறது என்றும் ஆனால் இது தற்காலிகமானது தான் என்றும் விரைவில் தங்கம் விலை மீண்டும் உச்சம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தங்கத்தில் சேமிக்கும் விருப்பம் உள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் திருமணம் போன்ற விசேஷ காரியங்களுக்கு தங்கத்தை வாங்க விரும்புபவர்கள் விலை குறைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நீண்டகால அடிப்படையில் ஒரு நல்ல லாபத்தை தரும் முதலீடு என்றும் தங்கம் குறையும் போதெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக அது ஒரு சில ஆண்டுகளுக்கு கழித்து மிகப்பெரிய லாபத்தை தரும் என்றும் கூறப்பட்டு வருகிறது. வேறு எந்த முதலீட்டை விட தங்கம் சிறந்த முதலீடு என பலமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்றும் எனவே தங்கத்தில் முதலீடு செய்வதில் நல்ல லாபம் தான் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews