தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்தோம். நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 700 ரூபாய்க்கு மேல் அதிகரித்த நிலையில் இன்றும் ஒரு சவரனுக்கு 300 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முதல் முறையாக வரலாற்றில் தங்கம் விலை ஒரு சவரன் 46 ஆயிரம் ரூபாய் என விற்பனை ஆகி வருவது ஏழைகளுக்கு தங்கம் இனி எட்டாக்கனி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை வெகு சீக்கிரம் உயரும் என்றும் தங்கம் விலை ஒரு சில மாதங்களில் 6000 எனவும் ஒரு சில வருடங்களில் பத்தாயிரம் எனவும் விற்பனை ஆகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட தங்கம் விலை 6,000ஐ நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் 5750 என்றும் ஒரு சவரன் தங்கம் 46,000 என்றும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 கேரட் சுத்த தங்கம் 6212 ரூபாய் என்றும் எட்டு கிராம் 49 ஆயிரத்து 696 என்றும் விற்பனை ஆகி வருகிறது. வெள்ளியை பொருத்தவரை நேற்றைய விலையை விட இன்று ஆயிரம் ரூபாய் ஒரு கிலோவிற்கு அதிகரித்து உள்ளது என்பதும் இன்று வெள்ளி விலை 82,800 என விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை வெகு சீக்கிரம் உயரும் என தங்க நகை வியாபாரிகள் கூறிவந்தது உறுதியாகி உள்ளது. நேற்றும், இன்றும் மட்டுமே தங்கம் விலை ஒரு கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் இந்த மாத இறுதிக்குள் ரூபாய் 6000 ஒரு கிராம் என விற்பனையாக வாய்ப்பிருப்பதாகவும் ஒரு சவரன் 48 ஆயிரம் என்றும் விற்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இன்னும் ஒரு சில வருடங்களில் அதாவது 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு கிராம் பத்தாயிரம் என்று ஒரு சவரன் 80,000 என்றும் விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நீண்ட கால அடிப்படையில் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்றும் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளை விட தங்கத்தில் முதலீடு செய்வது அதிகப்படியான லாபத்தை கொடுக்கும் என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.