தங்கம் விலை ஒரு கிராம் 5600 என்ற விலைகளில் கடந்த சில வாரங்களாக விற்பனை ஆகி வந்தது என்பதும் விரைவில் ஒரு கிராம் 6 ஆயிரம் என்றும் ஒரு சில ஆண்டுகளில் ஒரு கிராம் பத்தாயிரம் என்றும் விற்பனை ஆகும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6000ஐ நெருங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 91ம், ஒரு சவரன் தங்கம் ரூபாய் 728ம் உயர்ந்துள்ளது. நேற்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 5615 என்று விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 91 ரூபாய் அதிகரித்து 5706 என்றும் ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 648 என்றும் விற்பனை ஆகி வருகிறது. இன்னும் 300 ரூபாய் உயர்ந்து விட்டால் தங்கம் விலை ரவுண்டாக 6000 என வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 24 கேரட் சுத்த தங்கம் 6157 என்ற 8 கிராம் 69 ஆயிரத்து 256 என்ற விற்பனையாகி வருகிறது. வெள்ளியை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.81.80 என்றும் ஒரு கிலோ 81900 என்றும் விற்பனை ஆகி வருகிறது.
தங்கம் வெள்ளியை பொருத்தவரை நீண்டகால அடிப்படையில் மட்டுமின்றி குறைந்த கால அடிப்படையில் நல்ல லாபத்தை தரும் என்பதால் அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று அமெரிக்க சந்தையில் தங்கம் விலை திடீரென உயர்ந்ததால் தான் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது என்பதும் இனி வருங்காலத்தில் அதிகமாக உயரத்தான் வாய்ப்பு உள்ளது என்றும் தங்க நகை கடைக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை தங்கத்தில் முதலில் செய்தவர்களுக்கு இந்த விலையேற்றம் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்தாலும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு இனிமேல் தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.