மீண்டும் 45,000ஐ தாண்டிய தங்கம் விலை.. ஏற்றத்திற்கு முடிவே இல்லையா?

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.42,000 என்று இருந்த தங்கம் விலை ஒரு சவரன் தங்கம் விலை தற்போது 45 ஆயிரத்ஹ்டை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை ஓரளவு சரிந்து வந்த நிலையில் படிப்படியாக சரிந்து மீண்டும் பழைய விலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து சவரன் விலை 45 ஆயிரம் என ஆகியுள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை சென்னையில் இன்று ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5,630 என்றும், ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 45,040 என்று விற்பனையாகி வருகிறது. 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6096 என்றும் எட்டு கிராம் 48,768 என்றும் விற்பனையாக இருக்கிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து ரூ.80,400 என விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை எதிர்காலத்தில் உயரவே வாய்ப்பு இருப்பதாகவும் மீண்டும் குறைய வாய்ப்பில்லை என்றும் அப்படியே ஓரளவு குறைந்தாலும் ஒரு சில நாட்களில் மீண்டும் உயர்ந்து விடும் என்றும் தங்க நகை விலையை கண்காணித்து வரும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்க நகை வியாபாரிகள் இது குறித்து கருத்து கூறிய போது வரும் நாட்களில் திருமண சீசன் அதிகமாக வருவதால் கண்டிப்பாக தங்கம் விலை உயரவே வாய்ப்பு இருக்கிறது என்றும் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் மற்றும் திருமணத்திற்காக நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இப்போது கூட முதலீடு செய்யலாம் என்றும் விலை குறையலாம் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.