தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5000க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது 5600 க்கும் அதிகமாகிவிட்டது என்பதும் தங்கம் விலை இன்னும் ஒரு சில மாதங்களில் 6 ஆயிரம் ரூபாய் எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்கம் விலை சர்வதேச விலைக்கு ஏற்ப இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதும் அந்த வகையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5650 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ஒரு கிராம் தங்கம் ரூ.5650 என்று விற்பனையாகி வந்த நிலையில் திடீரென நேற்று 15 ரூபாய் ஒரு கிராமுக்கு உயர்ந்து 5665 என விற்பனையானது. இந்த நிலையில் அந்த 15 ரூபாய் இன்று மீண்டும் குறைந்து 5650 என விற்பனையாகி வருகிறது. அதே போல் ஒரு சவரன் தங்கம் விலை 45200 எனும் விற்பனையாகி வருகிறது.
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6060 என்றும் எட்டு கிராம் 48,480 என்றும் விற்பனையாகி இருக்கிறது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிராம் 60 ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ஒரு கிராம் 81 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.81 என்றும், ஒரு கிலோ 81 ஆயிரம் என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தையில் மிக அதிக அளவில் ஏற்ற இறக்கம் இருப்பதன் காரணமாக முதலீட்டாளர்கள் அதிக நஷ்டம் அடைந்துள்ளதால் அந்த பணத்தை எடுத்து தங்கத்தை வாங்குவதால் தான் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது என்பதும் அதனால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் தங்கம் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் நிலையில் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணம். அதுமட்டுமின்றி கல்யாண சீசன் தற்போது தொடங்க இருப்பதால் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதால் தங்கம் வெள்ளி விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு தங்கம் தான் என முடிவு செய்து அதிக அளவு தங்கத்தை வாங்கி முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கத்தின் தேவை இனி வருங்காலத்தில் அதிகம் இருக்கும் என்பதால் விரைவில் ஒரு கிராம் 6000 என்று இன்னும் ஓரிரு வருடங்களில் ஒரு கிராம் பத்தாயிரம் என்றும் விற்பனையாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.