தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒரு கிராம் 400 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனைக்கு வருகிறது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து நேற்று முன்தினம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்தது என்பதும் நேற்று தங்கத்தின் விலை உச்சத்துக்கு சென்று ஒரு கிராம் ரூ.5500ஐ தாண்டியது என்பதையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை சரிந்துள்ளதை அடுத்து தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்றைய விலையில் இருந்து இன்று 65 ரூபாய் ஒரு கிராமுக்கு தங்கம் குறைந்து உள்ளது என்பதும் 520 ரூபாய் ஒரு சவரனுக்கு தங்கம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு கிராம் ரூ.6000 என்ற விலைக்கு விற்பனை ஆகும் என்றும் அதேபோல் இன்னும் ஓரிரு வருடங்களில் ஒரு கிராம் ரூ.10,000 என்ற விலைக்கு விற்பனையாகும் என்றும் தங்க நகை வியாபாரிகள் கூறி வருகின்றனர். எனவே தங்கத்தில் எப்போது முதலீடு செய்ய சரியான நேரம் தான் என்றும் ஒரு பவுன் 500 ரூபாய்க்கு மேல் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தங்கம் என்பது ஒரு சீரான பாதுகாப்பான முதலீடு என்றும் தங்கத்தில் முதலீடு செய்வது எப்பொழுதுமே லாபத்தைத் தான் தரும் என்றும் பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர். நீண்ட கால அடிப்படையில் தங்கத்தை வாங்குவது மிகவும் சிறந்த முதலீடு என்றும், மியூட்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட மற்ற அனைத்து முதலீடுகளும் தங்கத்திற்கு பிறகு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று தங்கம் விலை குறைந்தாலும் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் தங்கம் விலை ரூ.5500ஐ தாண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5440.00
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 43520.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5802.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 46416.00
சென்னையில் இன்று வெள்ளி ஒருகிராம் விலை ரூபாய் 76.40
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 76400.00