பட்ஜெட்டில் இன்று தங்கத்திற்கான இறக்குமதி வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று தங்கத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியர்களின் விருப்பத்திற்குரிய முதலீடுகளில் ஒன்று தங்கம் என்பதும் தங்கம் என்பதை எப்போது வாங்கினாலும் அது நீண்டகால முதலீட்டின் அடிப்படையில் லாபத்தை கொடுக்கும் என்பதும் பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உச்சத்திற்கு சென்று உள்ளது என்பதும் 5300யும் தாண்டி ஒரு கிராம் 5400ஐ நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்கம் விலை இந்த ஆண்டுக்குள் ஒரு கிராம் விலை ரூ. 6000 என்ற விலைக்கு வரும் என்றும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஒரு கிராம் பத்தாயிரம் என்ற விலைக்கு விற்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரி தற்போது 15% என்று இருக்கும் நிலையில் இறக்குமதி வரியை குறைத்தால்தான் கடத்தல் தங்கத்தின் வருகை குறையும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து தங்கத்திற்கு வரியை குறைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்றைய பட்ஜெட்டில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் புதிதாக தங்கம் வாங்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5360.00
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 42880.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5722.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 45776.00
சென்னையில் இன்று வெள்ளி ஒருகிராம் விலை ரூபாய் 74.80
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 74800.00