தங்கம் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது 5300 ரூபாயை தாண்டி விட்டது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த ஆண்டுக்குள் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6 ஆயிரம் என்று உயர வாய்ப்பு இருப்பதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் ஒரு கிராம் பத்தாயிரம் ரூபாய் என்ற விலையில் விற்பனையாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை 5000க்கும் குறைவாக விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் தேவை இந்தியாவில் வரும் காலங்களில் அதிகமாக இருக்கும் காரணத்தினால் குறையும் தங்கம் உடனடியாக உயரவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது
இன்று சென்னையில் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 12 ரூபாய் ஒரு கிராமுக்கு குறைந்துள்ளது என்றும் அதேபோல் 96 ரூபாய் ஒரு சவரனுக்கு குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் இன்று குறைந்து சென்னையில் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை ஒரு சில நாட்கள் குறைந்தாலும் அந்த குறைந்த நேரத்தில் உடனடியாக வாங்கி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக இனி உயர தான் வாய்ப்பு இருக்கிறது என்றும் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிகப்பெரிய லாபம் காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தங்கத்தில் செய்யும் முதலீடு மிகவும் பாதுகாப்பானது மற்றும் நல்ல லாபத்தை தரக்கூடியது என்றும் எனவே தங்கத்தின் முதலீடு செய்வதை இப்போது முதல் தொடங்க வேண்டும் என்றும் பொருளாதார ஆலோசர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5338.00
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 42704.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5700.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 45600.00
சென்னையில் இன்று வெள்ளி ஒருகிராம் விலை ரூபாய் 74.50
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 74500.00