தங்கம் விலை கடந்து சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு சவரன் தங்கம் 40 ஆயிரத்தை கடந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் 43 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Goldசர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் உயரவில்லை என்றாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவின் காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த 17ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5300 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் ஒரே வாரத்தில் 80 ரூபாய் உயர்ந்து இன்று சென்னையில் ஒரு கிராம் ரூ.5380 என இன்று விற்பனை ஆகி வருகிறது. அதே போல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,080 என விற்பனையாகி வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கம் விலை கிராம ரூபாய் 4300 என்று இருந்த நிலையில் தற்போது ஒரே வருடத்தில் ஒரு கிராமுக்கு 1000 ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் தங்கம் விலை ஒரு கிராம் 6 ரூபாயை தொடும் என்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு கிராம் பத்தாயிரம் என்ற விலையை தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவேதான் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றும் தங்கம் எவ்வளவு உயர்ந்தாலும் அதை ஒரு சீரான இடைவெளியில் வாங்கி வைத்தால் நீண்ட கால அடிப்படையில் தங்கம் மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தங்கம் கையில் இருந்தால் பணம் தேவைப்படும் நேரத்தில் உடனே அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் வேறு எந்த முதலீட்டிலும் உடனடியாக பணமாக்க முடியாத நிலை இருப்பதால் தங்கமே மிகச் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது.
ஆபரணங்களாக மட்டுமின்றி சேமிப்புக்காகவும் தங்கத்தை வாங்கி வருவது தற்போது இந்தியர்கள் மத்தியில் அதிகரி த்து வருவதால் தான் இந்தியர்கள் மத்தியில் எப்போதுமே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.