ஆபரண தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்வு: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகிறதா?

ஆபரண தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்வு: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகிறதா?

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஏற்றதில் இருந்து வரும் நிலையில் இன்றும் ஒரு கிராமுக்கு பத்து ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் தங்கத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு கிராம் 4300 என்ற அளவில் விற்பனை ஆகிய தங்கம் தற்போது 5 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ள நிலையில் ஒரு கிராமுக்கு 700 ரூபாய் அதிகமாகியுள்ளது என்பதும் இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை தொடர்ந்து கொண்டு வருவதற்கு காரணம் பங்குச்சந்தை நிலையற்றதாக இருக்கிறது என்றும் எனவே தான் பங்குச் சந்தையிலிருந்து முதலீடுகளை எடுத்து அதிக நபர்கள் தங்கத்தில் முதலீடு செய்ததாகவும் அதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை இன்னும் சில மாதங்களுக்கு உயர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றும் ஒரு சில வருடங்களில் தங்கத்தின் விலை ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாயை எட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இப்பொழுது தங்கத்தில் முதலீடு செய்தாலும் கூட ஒரு சில வருடங்களில் நல்ல லாபம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி குறித்த விலை நிலவரங்களை தற்போது பார்ப்போம்:

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5086.00
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 40688.00

சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5488.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 43904.00

சென்னையில் இன்று வெள்ளி ஒருகிராம் விலை ரூபாய் 74.00
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.