அதிரடியாக குறைந்த தங்கம் விலை… வாங்குவதற்கு சரியான காலமா?

தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் குறைந்து உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருந்தாலும் தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம் அல்ல என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை வெகுவாக உயர்ந்தது என்பதும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஒரு கிராமம் ரூபாய் 4300 என்று இருந்த நிலையில் தற்போது 5ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

gold

ஆறுமாதத்திற்குள் தங்கம் ஒரு கிராம் 700 ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில் தற்போது தங்கம் வாங்குவது சரியான முதலீடு அல்ல என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் தங்கவிலை சரியும் என்றும் அப்போது வாங்கிக் கொள்ளலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்

ஆனால் அதே நேரத்தில் நீண்ட கால முதலீட்டை பொறுத்தவரை தங்கம் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் என்றும் ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

இருப்பினும் அவசர தேவை என்றால் மட்டும் தற்போது தங்கம் வாங்கி கொள்ளலாம் என்றும் நீண்டகால முதலீடு செய்வதற்காக என்றால் இன்னும் ஒரு சில மாதங்கள் காத்திருந்து தங்கம் விலை குறையும்போது வாங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது

gold

மேலும் தங்க இடிஎஃப் மற்றும் பாண்ட் வாங்குவதைவிட ஆபரண தங்கம் வாங்குவது நல்லது என்றும் அதில் செய்கூலி சேதாரம் இருந்தாலும் அந்த தங்கத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் வங்கியில் அல்லது அடகு கடையில் அடகு வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆனால் மற்ற முதலீட்டில் அந்த வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5015.00
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 40120.00

சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5417.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 43336.00

சென்னையில் இன்று வெள்ளி ஒருகிராம் விலை ரூபாய் 74.00
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.