உச்சம் தொட்ட தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இன்றைய தினத்திலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 4,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.38,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் சோகம்! மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி!!

தூயதங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் ரூ.5,258 ஆக விற்பனையாகிறது. இதனை தொடர்ந்து ஒரு பவுன் ரூ.42, 064 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் 67 காசுகளாகவும், ஒரு கிலோ 67 ஆயிரமாக விற்பனையாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment