Tamil Nadu
சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென சரிந்துள்ளது. சென்னையில் இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து ரூபாய் 4,447 எனவும், ஒரு சவரன் விலை ரூபாய் 176 குறைந்து ரூபாய் 35,576 எனவும் விற்பனையாகி வருகிறது
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 23 ரூபாய் குறைந்து ரூ. 4,850 எனவும் ஒரு சவரன் ரூபாய் 208 குறைந்து ரூ.38800 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67700 எனவும் விற்பனையாகி வருகிறது
