தொடரும் கனமழையால் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. சென்னையில் என்ன நிலவரம்?

வங்க கடலில் ஏற்பட்ட புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக சென்னையில் உள்ள பல இடங்களில் மழை பெய்தது என்பதும் அதேபோல் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் நல்ல மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

rain and schoolஇந்த நிலையில் கனமழை காரணமாக கடந்த வாரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பதும், இந்த வாரமும் பள்ளிகள் விடுமுறை தொடர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேற்று அறிவித்துள்ள நிலையில் இன்று காலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையிலுள்ள பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம்போல இயங்கும் என்றும் இன்று சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் நான்கு நாட்களுக்கு தொடர் மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.