இன்று சிஎஸ்கே – குஜராத் போட்டி.. சவாலாக இருப்பவர்கள் யார் யார்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் முதல் குவாலிஃபையர் போட்டி சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பெற்ற குஜராத் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற சிஎஸ்கே ஆகிய இரண்டு அணிகளும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன.
இன்றைய போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்றும் தோல்வி அடைந்த அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

csk winஇன்றைய போட்டியை பொறுத்தவரை இரு அணிகளும் வெற்றியை பெற தீவிரமாக முயற்சிக்கும் என்பதும் தங்கள் அனைத்து பலங்களையும் பயன்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குஜராத் அணியை பொறுத்தவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித்கான் ஆகிய இருவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். குறிப்பாக ரஷித்கான் ஒரு ஆல்ரவுண்டராக உள்ளாராக உள்ளார். அவர் எதிரணியின் பந்து வீச்சுகளை அடித்து நொறுக்கும் ஒரு பேட்ஸ்மேன் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கை பொருத்தவரை அபிநவ், டேவிட் மில்லர், விஜய் சங்கர், சுப்மன் கில், ராகுல் திவெட்டியா ஆகியோர் மிகச் சிறந்த பார்மில் உள்ளனர். குறிப்பாக கடந்த போட்டியில் சுப்மன் கில் அபாரமாக சதம் அடைத்தது அந்த அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லீக் போட்டிகளில் 14ல் 10ல் வெற்றி பெற்ற அணி என்பதால் குஜராத்தை வீழ்த்துவது என்பது சிஎஸ்கே அணிக்கு ஒரு சவாலான காரியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Hardik Pandya PTI scaledஅதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக ஜடேஜா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் கான்வே, ருத்ராஜ், ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் மிகச் சிறந்த பார்மில் உள்ளனர். பவுலிங்கை பொறுத்தவரை விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளராக தீபக் சஹார் உள்ளார் என்பதும் அவருக்கு உறுதுணையாக ஜடேஜா, மொயின் அலி, தேஷ்பாண்டே, பத்திரனா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இரு அணிகளும் இன்று மிகச்சிறந்த முறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் எந்த அணி வெல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் கண்டிப்பாக ஆடியன்ஸ் ஆதரவு சிஎஸ்கே அணிக்கு தான் இருக்கும் என்பதால் சிஎஸ்கே அணி வெற்றி பெற கூடுதல் வாய்ப்பிருப்பதாக வர்ணனையாளர்கள் கருதுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...