15 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை: வானிலை அறிவிப்பு

இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை நெருங்கி வரும் நிலையில் தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

rainஅந்த வகையில் இன்று இன்னும் 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் இந்த மழையில் இருந்து தப்பிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.