மாலை 5 மணிக்கு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மீட்டிங்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவை விட்டு முற்றிலும் கடந்து வடகிழக்கு பருவமழை இந்தியாவில் தொடங்கியது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பெருவாரியான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள சிறிய முதல் பெரிய அணைகள் வரை தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு அந்த அணையில் இருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை செய்கிறார்.

மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த ஆலோசனையில் தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்கள் என பலரும் காணொலி மூலம் கலந்து கொள்ள உள்ளனர். இதில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment