வேலூரில் திடீர் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இன்று அதிகாலை திடீரென வேலூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வட மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று 4:17 மணிக்கு திடீரென வேலூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 3.6 லிட்டர் என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கம் மிக குறைந்த ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் உணரவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு சிலர் நிலநடுக்கத்தை உணர்ந்து அச்சத்துடன் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலையில் திடீரென வேலூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment