நம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதுவும் குறிப்பாக கடந்த வாரம் துபாயில் சென்று தமிழகத்திற்கு முதலீட்டை அதிகரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்துகாக சென்றிருந்தார்.
அதன்பின்னர் தமிழகத்திற்கு வந்த உடனேயே அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக டெல்லி விமான நிலையத்திலேயே தமிழர்கள் பலரும் முதலமைச்சரை வரவேற்க காத்துக் கொண்டுள்ளனர். டெல்லியில் இன்று மதியம் ஒரு மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
பிற்பகல் 02:30 மணிக்கு அமைச்சர் நிதின் கட்கரியையும், 03:30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மாலை 04:30 மணிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதன் பின்னர் தமிழகம் திரும்புகிறார் ஸ்டாலின்.