இன்று 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலம் நிகழ்கிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வானிலை மையம்

இவை தென் தமிழ்நாட்டை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மதுரை, சேலம், கோவை, நீலகிரி, திருவள்ளூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்அதோடு மட்டுமில்லாமல் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் தொடங்கி 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment