இன்று திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு! நாளை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் அடுத்தடுத்து தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கககடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றைய தினம் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி அரபிக்கடலில் தென்கிழக்கு பகுதி, குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை மையம்

தமிழ் நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதோடு நாளைய தினம் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டிசம்பர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment