பேரவையில் இன்று தரமான சம்பவம் வெயிட்டிங்; ரவுண்டு கட்டி பதில் கொடுக்கப்போகும் 10 அமைச்சர்கள்!

சட்டத்துறை, நீதி நிர்வாகம், சிறைகள் – சீர்திருத்தப் பணிகள் துறை, செய்தி மற்றும் விளம்பரம் துறை ,எழுது பொருள் மற்றும் அச்சு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் காலை இன்று காலை 10மணிக்கு தொடங்க உள்ளது.

பேரவை தொடங்கியதும் வினாக்கள் விடைகள் நேரம் நடைப்பெறும்..இதில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.

இன்றைய வினா விடை நேரத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அனிதா ராதகிருஷ்ணன், ராமsசந்திரன், செந்தில் பாலாஜி, சேகர்பாபு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.

அதை தொடர்ந்து அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் அவையில் கொண்டவரப்பட உள்ளது. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்கிறார்.

தொடர்ச்சியாக, சட்டத்துறை,நீதி நிர்வாகம், சிறைகள் -சீர்திருத்தப் பணிகள் துறை , செய்தி மற்றும் விளம்பரம் துறை ,எழுது பொருள் மற்றும் அச்சு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேசுவார்கள். சட்டத்துறை,நீதி நிர்வாகம், சிறைகள் -சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி, செய்தி மற்றும் விளம்பரம் துறை ,எழுது பொருள் மற்றும் அச்சு துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் பதிலுரை மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment