8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை! 2 நாட்களுக்கு மழைத் தொடரும்!!

தற்போது தமிழகம் முழுவதும் வெள்ளப்பெருக்காடு போல காணப்படுகிறது. தமிழகத்தில் தொடர் கனமழை அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது எட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

சென்னை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று அதி  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அதி கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அதி கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலையில் நாளை அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்

இதனால் தென் மேற்கு வங்க கடல்,மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. நவம்பர் 12ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழக,தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment