தென்தமிழ்நாட்டை குறி வைத்த கனமழை; 7 மாவட்டங்களில் இன்று பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. மக்கள் தொடர் மழையினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

கனமழை

அதன்படி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் தமிழக 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதோடு திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளைய தினமும் இந்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தலைநகர் சென்னையில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி 26 ,27 ஆகிய இரண்டு தினங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 26, 27ஆம் தேதி சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இந்த மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரம், பந்தலூரில் ஏழு செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.காஞ்சிபுரம், சிவகிரியில் தலா ஐந்து செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.மன்னார் வளைகுடா, வங்கக்கடல், குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் எக்காரணம் கொண்டும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment