தமிழகத்தில் தொடர்ந்து 500ஐ தாண்டி வரும் கொரோனா பாதிப்பு.. இன்று எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்து சில நாட்களாக 500ஐ தாண்டி கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் பொது இடங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்து உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என மாவட்ட கலெக்டர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் மாஸ்க் அணிவதில் இன்னும் பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னைகள் 133 பேர்களும் கோவையில் 65 பேர்களும் செங்கல்பட்டில் 34 பேர்களும் சேலத்தில் 27 பேர்களும் திருச்சியில் 23 பேர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 401 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் கொரோனாவால் இன்று ஒருவர் பலியாகி உள்ளார் என்பதும் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழக முழுவதும் 3455 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

corona april 18

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.