கனமழை எதிரொலி: இன்று 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலச்சரிவு மற்றும் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய தினத்தில் நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் படி, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

இத்தகைய அறிவிப்பினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment