மழை பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் விடுமுறை!!

சில நாட்களுக்கு முன்புதான் சென்னை கடற்கரையை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரை கடந்தது. அதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு

அதன்பின்னர் இரண்டு நாட்கள் கனமழை மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அது என்னவென்றால் வங்கக் கடலில் புதிதாக மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக கூறியிருந்தது.

இன்றைய தினம் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

அதன்படி மழை பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தமிழகத்தில் 26 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டது. எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன .

18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி,நெல்லை,கிருஷ்ணகிரி, கள்ளகுறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment