Connect with us

இன்று 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!-வானிலை ஆய்வு மையம்;

rain 1 1

தமிழகம்

இன்று 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!-வானிலை ஆய்வு மையம்;

சமீப காலமாக நம் தமிழகத்தில் தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நேற்றைய தினம் தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்ததாக தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருச்சி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இதனால் மக்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top