Connect with us

புத்தம் புது காலை தடுப்பூசியோடு தொடக்கம்… இன்று 19ஆவது மெகா தடுப்பூசி முகாம்!

தடுப்பூசி

செய்திகள்

புத்தம் புது காலை தடுப்பூசியோடு தொடக்கம்… இன்று 19ஆவது மெகா தடுப்பூசி முகாம்!

புத்தம் புது காலை தடுப்பூசியோடு தொடக்கம்… இன்று 19ஆவது மெகா தடுப்பூசி முகாம்!

உலகில் உள்ள அனைத்து நாடுகளை திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்தியா தடுப்பூசியில் சாதனை புரிந்து கொண்டு வருகிறது .ஏனென்றால் தற்போது வரை இந்தியாவில் 150 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மெகா தடுப்பூசி முகாம்

இதற்கு பெரும் உறுதுணையாக அமைந்தது மெகா தடுப்பூசி முகாம்கள் தான். அந்த வரிசையில் தமிழகத்தில் வாரம்தோறும் மிக தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை தமிழகத்தில் 19 ஆவது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இவை தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஏராளமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் அவரும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இணைந்து பேட்டி அளித்துக் கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழகத்தில் 2580 ஊராட்சிகளில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில் மட்டும் 94.19 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் 74.11 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

சென்னையில்38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். இதிலும் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 616 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top