19 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 19 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 19 மாவட்ட பள்ளி மாணவர்கள் இன்று பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடதக்கது

இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பெயர்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், நாகை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர்

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை என்பதால் இனி அடுத்ததாக நவம்பர் எட்டாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment