இன்று 16 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்! 3 நாட்களுக்கு கொட்டப் போகுது கனமழை!!

இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட்அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு

அதன்படி  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி காரைக்காலில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளைய தினம் சென்னை,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருப்பூர், ஈரோடு,கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment