சென்னை உள்பட 15 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: முழு விபரங்கள்!

மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும் புயல் பெரும் கனமழை பெய்து வருவதையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் நேற்று புயல் கரையை கடந்து உள்ள நிலையில் சென்னையின் பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

holiday

இந்த நிலையில் இன்று சென்னை உள்பட 15 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கடலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விழுந்ததால் அந்த சுவர் அருகே நிறுத்தப்பட்டிருந்த சேதமான கார்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.