Connect with us

அச்சம் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும்! ஏற்பாடு செய்யுங்கள்;-தேர்தல் ஆணையாளர்

vote 1280

தமிழகம்

அச்சம் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும்! ஏற்பாடு செய்யுங்கள்;-தேர்தல் ஆணையாளர்

அச்சம் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும்! ஏற்பாடு செய்யுங்கள்;-தேர்தல் ஆணையாளர்

வர இருக்கின்ற 19ஆம் தேதி நம் தமிழகத்திற்கு மிக முக்கியமான நாளாகும். ஏனென்றால் தமிழகத்தில் பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளும் மீண்டும் கூட்டணி வைத்து போட்டியிட ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

அதன்படி தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க அறிவுறுத்தி மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் அறிவுரை வழங்கியுள்ளார். மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் உடன் ஆலோசனை நடத்திய பின் ஆணையர் பழனிகுமார் இவ்வாறு அறிவுறுத்தலை வெளியிட்டார்.

தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக, முறையாக கடைபிடிக்க படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். வேட்புமனு பரிசீலனை நடுநிலைமையுடன் நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் கூறினார். அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top