Connect with us

ஜனாதிபதி தேர்தலுக்கு கிறிஸ்தவரை பொது வேட்பாளராக நிறுத்துக-திருமா

Presidents of India Collage

செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு கிறிஸ்தவரை பொது வேட்பாளராக நிறுத்துக-திருமா

இந்தியாவில் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தலில் கிறிஸ்தவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவர் ஆனது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். கடந்த 8 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர் என்றும் திருமாவளவன் கூறினார்.

இந்தியாவின் கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமூகம் ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது என்றும் திருமாவளவன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top